×

வீல்சேரில் அமர்ந்து கொண்டே மம்தா ஹாட்ரிக் வெற்றி: திரிணாமுல்லை சூறையாடிய பாஜக கனவு தகர்ந்தது

புதுடெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி வீல்சேரில் அமர்ந்து கொண்டே 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளார். மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில், கடந்த முறையை போல் இல்லாமல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில் பாஜ. பல்வேறு வியூகங்களை கையில் எடுத்தது. திரிணாமுல் காங்கிரசில் பலம் வாய்ந்த தலைவராக திகழ்ந்த சுவேந்து அதிகாரியையும், அவருடைய குடும்பத்தையும் ஒட்டு மொத்தமாக வளைத்து போட்டு தனது கட்சியில் சேர்த்தது. மேலும், தினமும் அக்கட்–்சி எம்பி.க்கள். மூத்த தலைவர்கள், எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கி, இக்கட்சி தலைவர் மம்தாவை நிலைக்குலைய வைத்தது.

இந்த மாநிலத்தை பொருத்த வரை, ஆரம்பம் முதலே திரிணாமுல் காங்கிரஸ், பாஜ இடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் மோடி, அமித்தஷா உட்பட பாஜ தலைவர்கள் அனைவரும் இந்த மாநிலத்தை சுற்றி சுற்றி வந்து பிரசாரம் செய்து மிரட்டினர். 200 இடங்களுக்கு மேல் பிடித்து பாஜ ஆட்சியை பிடிக்கும் என்று கூறி வந்தனர். ஆனால், இந்த மாநிலத்தில் நேற்று பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஏற்கனவே, இங்கு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் திரிணாமுல் காங்கிரஸ் 3வது முறையாக வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. அதேபோல், ஒரு சில அமைப்புகள் பாஜ ஆட்சியை பிடிக்கும் என்று கூறின. இ

தனால், இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதில் இழுபறியோ அல்லது தொங்கு சட்டப்பேரவையோ அமையும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், நேற்றைய வாக்கு எண்ணிக்கையில் இந்த கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி விட்டு, திரிணாமுல் காங்கிரஸ் யார் எதிர்பாராத வகையில் 202 தொகுதிகளில் பிடித்து அமோக வெற்றி பெற்றது. ஆட்சியை பிடிக்கப் போவதாக கூறிய பாஜ.வுக்கு 88 இடங்களே கிடைத்தன. இதன்மூலம், இதன் ஆட்சி கனவு தகர்ந்தது. தேர்தல் பிரசாரத்தின்போது மம்தா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் காலில் காயம் ஏற்பட்டது. ஆனால், வீல்சேரில் அமர்ந்து கொண்டே மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து. இந்த வெற்றியை அவர் பறித்துள்ளார். இதன்மூலம், அரசியல் வட்டாரத்தில் அவரை  மேற்கு வங்க பெண் சிங்கம் என்று அழைக்கின்றனர். அதன்படி, தான் ஒரு பெண் சிங்கம்தான் என்பதை அவர் நிரூபித்தார்.

நந்திகிராமில் சறுக்கல்
 திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாகவும், முடிந்தால் முதல்வர் மம்தா தன்னை எதிர்த்து அங்கு போட்டியிடும்படியும், மம்தாவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் எனவும் சுவேந்து சவால் விட்டார். அவரது சவாலை ஏற்றுக் கொண்டு மம்தா தான் வழக்கமாக போட்டியிடும் பவானிப்பூரை விட்டு இம்முறை நந்திகிராமில் போட்டியிட்டார். நேற்று இங்கு நடத்த வாக்கு எண்ணிக்கையில் சுவேந்து அதிகாரி தொடர்ந்து முன்னிலை வகித்தார். இதனால், இத்தொகுதியில் மம்தா தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.

* சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே மம்தா பிரசாரம் செய்ததும், பாஜ.வின் ஆள் பிடித்து தந்திரத்தால் மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியாலும் திரிணாமுல்லுக்கு மக்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

மேற்கு வங்கம்       
மொத்தமுள்ள தொகுதி 294
முன்னிலை நிலவரம் 292
திரிணாமுல் -205
பாஜ - 85
இடதுசாரி- 1
மற்றவை- 1

Tags : Mamta Hadrick ,Thrinamulla , Wheelchair-bound Mamata hat-trick victory: BJP's dream of looting Trinamool shattered
× RELATED சிக்கிம், அருணாச்சலப் பிரதேச...