×

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள்: 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை

சென்னை: தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க., 20 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. தாராபுரம் (தனி) தொகுதியில் பா.ஜ., மாநில தலைவர் முருகன் போட்டியிட்டார். இங்கு நேரடியாக, தி.மு.க.,வுடன் மோதுவதால் பெரும் பரபரப்பு நிலவி வந்தது.

முருகன் முதல் சுற்றில், 4,218 ஓட்டு பெற்றார். இரண்டாம் சுற்றில், 8,353 ஓட்டு பெற்றார். தி.மு.க., வேட்பாளர் கயல்விழியை விட, 1,750 ஓட்டு கூடுதலாக பெற்று முன்னிலை வசிக்கிறார். இதேபோல், துறைமுகம், உதகமண்டலம், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய தொகுதிகளிலும் பா.ஜ., வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.

Tags : Tamil Nadu Assembly General Election Results ,BJP , Tamil Nadu Assembly, General Election, BJP lead in 5 constituencies
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...