தமிழக சட்டமன்ற தேர்தல்!: விருத்தாசலத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா பின்னடைவு..!!

கடலூர்: விருத்தாசலத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா பின்னடைவை சந்தித்துள்ளார். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. 

இன்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கையானது விறுவிறுப்புடன்  நடைபெற்று கொண்டிருக்கிறது. பெரும்பாலான தொகுதிகளில் திமுகவே முன்னிலை வசித்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு தொகுதியின் முதல் 1, 2 சுற்றுகளின் முடிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. 

இந்நிலையில், விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா பின்னடைவை சந்தித்துள்ளார். விருத்தாசலத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 2ம் இடத்தில் பாமக இருக்கிறது. விருத்தாசலத்தை பொறுத்தவரையில் தேமுதிகவுக்கு, பாமகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வந்து கொண்டிருக்கக்கூடிய முடிவுகள் வேறுமாதிரியாக இருக்கின்றன. விருத்தாசலம் தொகுதியில்  தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

Related Stories:

>