×

‘தனி ஒருவனாக’ பொளந்து கட்டிய பொலார்டு கடைசி பந்தில் மும்பை ‘திரில்’ வெற்றி

புதுடெல்லி: சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 20 ஓவரின் கடைசி பந்தில் 2 ரன் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. புது டெல்லியில் துவங்கிய ஐபிஎல் தொடரின் 27வது போட்டியில் நேற்று டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கெய்க்வாட், டூ பிளெப்ஸி களம் இறங்கினர். 4 ரன் எடுத்த நிலையில் கெய்க்வாட் அவுட் ஆனார். இதன் பின்னர் மொயின், டூபிளெப்ஸி மும்பை பந்தை தெறிக்கவிட்டனர். அதே ஓவரின் 5 பந்தில் மொயின் அலி 58 ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விக்கெட் கீப்பர் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து பந்து வீச வந்த பொல்லார்ட் தான் வீசிய ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் டூ பிளெப்ஸி 50 ரன் (28 பந்து, 2 பவுண்டரி , 4 சிக்சர்) எடுத்து பொல்லார்டு பந்தில் அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே 2 ரன் எடுத்த நிலையில் ரெய்னா வெளியேறினார்.

அடுத்து வந்த அம்பாதி ராயுடுவின் சரவெடிவெடியாக வெடித்தார். அவர் 72 ரன் (27 பந்து, 4 பவுண்டரி 7 சிக்சர் ) எடுத்தார். ஜடேஜா மறுமுனையில் 22 ரன் எடுத்தார். இறுதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 218 ரன்கள் குவித்து. இந்த ஆட்டத்தில் பூம்ரா 4 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே எடுத்து 56 ரன்களை வாரி வழங்கினார். இதையடுத்து கடினமான இலக்கை எட்டிபிடிக்கும் முனைப்புடன் மும்பை களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 35 ரன்(24 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), டீகாக் 38 ரன் (28 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்து ரன் சிறப்பான தொடக்கம் கொடுத்து, தாகூர், மொயின் அலி பந்தில் அவுட் ஆனார்கள். பின்னர் வந்த பொலார்டு ரவுண்ட் கட்டி அடிக்க தொடங்கினார். அவர் இறுதி வரை அவுட் ஆகாமல் 87 ரன் (34 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) எடுத்தார். கடைசி ஓவர் வரை ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்தார். கடைசி ஓவரில் பவுண்டரி, சிக்சர் மற்றும் வெற்றிக்கான 2 ரன்களை அடித்தார். தனி ஒருவனாக பொலார்டு மும்பை அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

Tags : Pollard ,Mumbai , Pollard, who was ‘solo’, won the Mumbai ‘thrill’ off the last ball
× RELATED பாண்டியா பாவம்…தேற்றுகிறார் போலார்டு