×

ரிலையன்சுக்கு மட்டும் சுக்ரதிசை கொரோனா காலத்திலும் 108 சதவீதம் அதிக லாபம்: சில்லறையில் ரூ.41,926 கோடி வருவாய்

மும்பை: கொரோனா காலத்திலும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.13,277 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 108% அதிகமாகும். கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான சரிவை சந்தித்து வரும் நிலையில், ஆசியாவின் நம்பர்-1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் ஜெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த 3ம் காலாண்டில் ரூ.13,101 கோடி லாபம் ஈட்டிய ரிலையன்ஸ், கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த கடைசி காலாண்டில் ரூ.13,277 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபத்தை விட 108 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டின் கடைசி காலாண்டில் ரிலையன்ஸ் ₹6,348 கோடி மட்டுமே லாபம் ஈட்டிருந்தது. கடந்தாண்டில் ரூ.1.39 லட்சம் கோடியாக இருந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 11 சதவீதம் அதிகரித்து, 1.54 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எண்ணெய்-கெமிக்கல்ஸ், சில்லரை விற்பனை, தொலை தொடர்பு துறை ஆகியவற்றில் ரிலையன்ஸ் மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது.

* குறிப்பாக, எண்ணெய் - கெமிக்கல்ஸ் வணிகத்தின் வருவாய் 4.4% அதிகரித்து, ரூ.1.01 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.96,732 கோடியாக இருந்தது.
* டிஜிட்டல் சேவைகளின் வருவாய் ரூ.22,628 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 19,153 கோடி ரூபாயாக இருந்தது.
* சில்லறை வணிக வருவாய் ரூ.41,926 கோடியாக அதிகரித்துள்ளது.
* ஜியோவின் நிகர லாபம் 47 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் கடைசி காலாண்டில் ரூ.2,379 ஆக இருந்த லாபம் தற்போது ரூ.3,508 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Tags : Reliance alone earns Rs 41,926 crore in retail revenue
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...