லாரியின் அடியில் சிக்கிய கன்று குட்டியை மீட்க தாய் பசு போராட்டம்: புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சரக்கு லாரியின் அடியில் சிக்கிய கன்று குட்டியை மீட்க போராடிய தாய்ப் பசுவின் பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட கீழ 2ம் வீதியில் உள்ள கடைகளுக்கு சரக்குகளை இறக்குவதற்காக லாரி ஒன்று நின்றுள்ளது. அப்போது அவ்வழியாக தாய் பசுவுடன் வந்த கன்றுக்குட்டி திடீரென்று லாரிக்கு அடியில் சென்று சிக்கி கொண்டது. பின்னர் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்ட கன்றுகுட்டியை மீட்க தாய் பசு போராடியது. லாரியை சுற்றிச் சுற்றி வந்து கத்தியது. அப்பகுதியில் செல்வோரின் கவனத்தை ஈர்த்தது.

பின்னர் அப்பகுதி பொதுமக்கள் லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்ட கன்றுக்குட்டியை மீட்க அதன்  காலை பிடித்து இழுத்தபோது, தன் குட்டியை மற்றவர்கள் துன்புறுத்துகிறார்கள் என்று எண்ணிய தாய்ப் பசு அவர்களை முட்ட வந்தது. பின்னர் பொதுமக்கள், தாய்ப்பசுவை சிறிது தூரம் விரட்டிவிட்டு, கன்றுகுட்டியை லாரியின் அடியால் இருந்து மீட்டனர். அதை நோக்கி ஓடிவந்த தாய்ப்பசு வாஞ்சையுடன் குட்டியை நாக்கால் நக்கி, தன்னுடன் அழைத்துச் சென்றது. இக்காட்சி பார்ப்பவர்களை நெகிழச் செய்தது.

Related Stories:

>