×

கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள முன்கள சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு..!!

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள முன்கள சுகாதார பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2ம் அலையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக பல்வேறு அதிகாரம் பெற்ற குழுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா நிவாரணப் பணிகளை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன் பின்னர் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கிய போது சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. தற்போது 2ம் அலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அந்த திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப் சுகாதார பணியாளர்களின் பங்களிப்பு என்பது இன்றியமையாததாக உள்ளது. தனது உயிரை துச்சமாக மதித்து களம் கண்டனர். கொரோனாவை வென்றெடுக்க அரசுக்கு துணை நின்றனர். இந்நிலையில், முன்கள சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Corona, former health worker, insurance plan
× RELATED ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி...