பாலிவுட் நடிகர் ரந்தீர் கபூருக்கு கொரோனா

மும்பை: பாலிவுட்டின் மூத்த நடிகர் ரந்தீர் கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர், கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா வைரசின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாலிவுட்டில் கடந்த சில வாரங்களில் மட்டும்  நீல் நிதின் முகேஷ், சோனு சூத், மனிஷ் மல்ஹோத்ரா, கத்ரீனா கைஃப், அக்‌ஷய் குமார், கோவிந்தா, பரேஷ் ராவல், ஆலியா பட், ரன்பீர் கபூர், மற்றும் ரோஹித் சரஃப் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதற்கு முன்னதாக,  அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், அர்ஜுன் கபூர், மலாக்கா அரோரா மற்றும்  சிலரும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பாலிவுட் மூத்த நடிகர் ரந்தீர் கபூர் நேற்றிரவு மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். இதுெதாடர்பாக கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் சந்தோஷ் ஷெட்டி கூறுகையில், ‘மூத்த நடிகர் ரந்தீர் கபூருக்கு (74) நேற்று இரவு சுவாச பிரச்னை ஏற்பட்டதால், கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இருந்தும் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தீவிர சிகிச்சையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்’ என்றார்.

Related Stories:

>