×

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விமானப்படை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியாவுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக டெல்லி, மராட்டியம் போன்ற மாநிலங்களில் இந்த தட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியாவுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். 


பிரதமர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் விமானப்படையின் பங்களிப்பை அதிகப்படுத்துவது குறித்து பிரதமர், விமானப்படை தளபதி இடையே ஆலோசிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பரவியர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது.



Tags : Modi ,Air Chief Marshal , Corona, Commander of the Air Force, Prime Minister Modi, advised
× RELATED பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய்...