×

சென்னையில் ஆக்சிஜன் வசதியுடன் மேலும் 3 இடங்களில் கொரோனா சிறப்பு வார்டு: மாநகராட்சி அதிகாரி தகவல்

சென்னை: சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 1,618 படுக்கைகள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 1,200 படுக்கைகள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 450 படுக்கைகள், ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனையில் 575 படுக்கைகள், கிண்டி கிங்ஸ் இன்டியூட்டில் 525 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர 10 மருத்துவமனைகளில் 1,750 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 14 இடங்களில் 11,645 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 2,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதை சமாளிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் மேலும் 3 இடங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கீழ்ப்பாக்கம் உள்விளையாட்டு அரங்கம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம், வட சென்னையில் கே.பி.பார்க் ஆகிய இடங்களில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்த மையத்துக்கு குழாய் வழியாக ஆக்சிஜன் விநியோக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 புதிய கொரோனா சிகிச்சை மையத்திலும் பயிற்சி பெற்ற மருத்துவர்கள், ெசவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் நியமிக்கவும் சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Corona Special Ward ,Chennai , Corona Special Ward at 3 more places with oxygen facility in Chennai: Corporation Officer Information
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...