×

பகவான் மகாவீரர் போதித்த அகிம்சை, சத்தியம், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையை பின்பற்றுவோம் : முதல்வர் பழனிசாமி

சென்னை: மகாவீர் ஜெயந்தியையொட்டி சமண சமய மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களின்  மகாவீர் ஜெயந்தி வாழ்த்துச் செய்தி

சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரரான பகவான் மகாவீரர் அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பகவான் மகாவீரர் அவர்கள் போதித்த அகிம்சை, சத்தியம், கள்ளாமை, பற்றற்று இருத்தல், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமை போன்ற உயரிய நெறிகளை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கும்.   

அறத்தையும், அகிம்சையையும் இரு கண்களாக போற்றிய பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Lord ,Mahāvārī ,Principal ,Palanisāmi , முதல்வர் எடப்பாடி பழனிசாமி
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்