சிபிசிஐடி விசாரிக்கக்கோரி வழக்கு

மதுரை: சிறையில் கொலை செய்யப்பட்ட முத்துமனோவின் தந்தை பாபநாசம், சிபிசிஐடி விசாரணை கோரி  ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், பாளை சிறையில் அதிகாரிகள், ஜாதிய பாகுபாட்டுடன் நடந்து கொள்வர். அங்கு குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு என தனித்தனியாக அறைகள் வைத்துள்ளனர். இந்தக் கொலை குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடவும், சிறைக்குள் உள்ள சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டுமென்றும், கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிறைத்துறை போலீசார் மீது சட்டரீதியாகவும், துறைரீதியாகவும் உரிய நடவடிக்கை எடுக்கவும், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற  வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்நிலையில் நீதிபதி ஜி.இளங்கோவன் முன் வக்கீல் ெஹன்றி டிபேன் ஆஜராகி, ‘‘இந்த மனுவை உடனடியாக அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்’’ என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘ குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கவனக்குறைவாக செயல்பட்ட சிறை அலுவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முறையான விசாரணை நடந்து வருகிறது’’ என்றார். இதையடுத்து மனு பட்டியலிடப்பட்டதும் விசாரிக்கப்படும் என நீதிபதி கூறியுள்ளார்.

Related Stories:

More
>