×

கொரோனா பரவலால் திருச்சூர் பூரம் திருவிழாவை எளிய முறையில் கொண்டாட முடிவு: இன்று குடைமாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது

பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான திருச்சூர் பூரம் திருவிழா இன்று மிகவும் எளியமுறையில் கொண்டாடப்பட உள்ளது. கேரளாவில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக நடைபெறும் திருச்சூர் பூரம் திருவிழா கொரோனா வைரஸ் தொற்று 2 அலை பரவல் காரணமாக இம்முறை ஆரவாரங்கள் எதுவுமின்றி மிகவும் எளியமுறையில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. விழாவின் முன்னோடியாக வடக்குநாதர் தெற்குகோபுர வாயில்  நடைதிறக்கப்பட்டு கொச்சின் தேவஸ்தானத்தின் வளர்ப்பு யானை சிவக்குமார் மீது தெச்சிக்காடு அம்மன் எழுந்தருளி திருச்சூர் பூரம் திருவிழாவின் பிரச்சார ஊர்வலம் மாநகரவீதியில் நேற்று நடைபெற்றது.

விழாவின் முக்கிய கோவில்களான பாரமேற்காவு, திருவம்பாடி ஆகிய இரண்டு பிரிவினரின் யானைகள் குறைந்தளவே பங்கேற்கின்றன. விழா நடைபெறுகின்ற கோவில்களுக்குள் தரிசனம் செய்ய அனுமதி சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து வருகின்றனர். தடுப்பூசி போட்டவர்களுக்கும், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை முடித்து நெகடீவ் சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குடைமாற்றும்  நிகழ்ச்சியானது தேக்கின்க்காடு தெற்குகோபுரவாயில் முன்பாக இன்று மாலை நடைபெற உள்ளது. இதை காண குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். விழா நிகழ்ச்சிகளை அனைவரும் வீட்டிலிருந்தப்படியேப் பார்ப்பதற்கு நேரடி ஒளிபரப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Tags : Thrissur Pooram festival ,Corona , Decision to celebrate Thrissur Pooram festival in a simple way by Corona spread: Umbrella show is going on today
× RELATED கேரளாவின் திருச்சூர் பூரம் விழாவில்...