×

தேர்தல் அறிவிப்புக்கு முன் பூங்கா பராமரிப்பில் அதிகாரிகள் 5 கோடி வரை சுருட்டிய கதையை சொல்கிறார் : wiki யானந்தா

‘‘காட்டு பகுதியில் எதை மறைப்பதற்காக பொதுமக்களை, பக்கதர்களை அனுமதிக்க அல்வா மாவட்ட வனத்துறையினர் மறுத்து வருகிறார்கள்..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கொரோனா பரவலை காரணம் காட்டி நெல்லை மாவட்ட வனத்துறையினர் கடந்த சில மாதங்களாக சுற்றுலா தலங்களை மூடி வருவது சரி.. அதுல ஒன்று களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியில் நடக்கும் தவறுகளை மறைப்பற்காக யாரையும் அனுமதிப்பதில்லையா என்ற புகார் குரல் எழுந்துள்ளது.  மற்றொன்று சாலை சீரமைப்பை காரணம் காட்டி கடந்த 2 ஆண்டுகளாக மணிமுத்தாறு அருவிக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. சாலை போட்டாங்களா… சாலை போடாமலே மழையில் அடித்து சென்றுவிட்டதாக கணக்கு காட்டி மீண்டும் சாலை போடுவார்களா என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது. அகத்தியர் அருவிக்கு மேல்பகுதியில் உள்ள கல்யாணதீர்த்தம் கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் அகத்தியர் சிலை சமீபத்தில் வெள்ளத்தில் சேதம் அடைந்த நிலையில், கோயிலுக்கு பக்தர்கள் வருவதை தடுக்கலாம். ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலை மற்றும் கோயில் சுவர்களை நாங்கள் சீரமைக்கிறோம் என உபயதாரர்கள் முன்வந்தும் வனத்துறை அதை காதில் வாங்க மறுக்கிறதாம். கட்டுமானம் நடந்தால் நாலு பேருக்கு வேலை கிடைக்கும் அதை ஏன் தடுக்க வேண்டும் என்பது பக்கதர்களின் கேள்வியாக உள்ளது. ஆனால் எல்லோருடைய கேள்விக்கும் அல்வா கொடுத்து நழுவும் துறையாக அல்வா மாவட்ட வனத்துறை இருப்பதாக பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘பூங்கா பராமரிப்பு பணம் 5 கோடி மாயமானதாக பேச்சு ஓடுதே… ’’ ‘‘கடலோர மாவட்டத்தில் நகராட்சி பராமரிப்பில் மொத்தம் 15 பூங்காக்கள் உள்ளதாம். இந்த பூங்காக்கள் சேதமடைந்து இருந்ததால் அந்த பூங்காக்களை பராமரிப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட கடந்த இலை ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி, கலெக்டரின் தன்விருப்ப நிதி, எம்எல்ஏ நிதி என பல நிதிகளை பெற்று பராமரிப்பு பணிக்காக ஆன்லைன் டெண்டர் விடப்பட்டதாம். ஆனால், இந்த ஆன்லைன் டெண்டரில் பங்கேற்க தங்களுக்கு கைப்பாவையாக செயல்படுபவர்களுக்கு மட்டுமே நகராட்சி அதிகாரி ராஜ் பெயர் கொண்டவர் அழைப்பு விடுத்து இருந்தாராம்.இதில் அவர்கள் மட்டும் பங்கேற்று பூங்காக்கள் பராமரிப்பு பணி செய்ய டெண்டர் எடுத்தனர். டெண்டரில் கோரப்பெற்ற தொகையை உடனே ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நிறைவுபெறுவதற்கு முன்பே முழு தொகையை எடுத்து கொண்டார்களாம். ஆனால், பூங்காவில் குடிநீர் வசதி, மின்விளக்குவசதி, கண்காணிப்பு கேமரா பொருத்துதல் என எந்த அடிப்படை வசதியும் செய்யப்பட வில்லையாம். ஆனால் இந்த வசதிகள் எல்லாம் செய்திருப்பதாக தெரிவித்து பல கோடிகளை  பெற்றுக் கொண்டார்களாம். ஒப்பந்தகாரர்களுக்கு காலதாமதம் இன்றி உரிய தொகை கிடைக்க தேர்தல்தேதி அறிவிப்பதற்கு முந்தைய நாள் பூங்காக்கள் அனைத்தும் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டதாம்.. இதற்காக நகராட்சி அதிகாரி இவருக்கு கீழ் உள்ள அதிகாரிகள் என ரூ.5 கோடி வரையிலும் சுருட்டியுள்ளார்களாம். தற்போது ஆட்சி மாற்றத்தால் இந்த 5 கோடி சுருட்டல் விவகாரம் நகராட்சி அலுவலகத்திற்குள்ளே கசிய ெதாடங்கி உள்ளதால் பணத்தை சுருட்டிய அதிகாரிகள் கிலியில் இருந்து வருகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை அமைச்சர்களோடு நெருக்கமாக இருக்கும் பெண் அதிகாரி முறைகேடுகள் செய்தும் தப்பித்து வருகிறாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்தவர்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே மிடுக்கு காட்டி வந்த அதிகாரிகள் துறைகள்தோறும் இருக்கின்றனர். அவ்வகையில் ‘‘சீதை நாயகரின் பெயரில் துவங்கும்’’ மாவட்டத்தின், ‘‘பெரிய கண்மாய்’’ உடைய ஊரில் அரசு மருத்துவமனை பெண் அதிகாரி ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இலைக்கட்சியின் அமைச்சராக இருந்தவரது நெருங்கிய உறவினரென உயரதிகாரிகளிடம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு பல்வேறு முறைகேடுகளுடன், ஊழியர்கள், நோயாளிகள் புறக்கணிப்பிலும் ஈடுபட்டபடி, நீண்ட காலம் இடமாறுதலின்றி இருந்து வருகிறாராம். பொதுமக்கள் இவரை மாற்றும்படி வைத்த கோரிக்கைகள் காற்றில் கரைந்து போய் விட்டதாம்…. சமீபத்தில் இம்மருத்துவமனையை ஆய்வு செய்ய வந்த தொகுதியின் எம்எல்ஏவிடம், ஒட்டுமொத்த மக்களும் திரண்டு வந்து, ‘‘ஒரே ஒரு காரியம் செஞ்சா போதுங்க… அந்த பெண் அதிகாரியை மட்டும் இடமாறுதல் செஞ்சா போதும். அத்தனையும் சரியாயிடும்’’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.  …

The post தேர்தல் அறிவிப்புக்கு முன் பூங்கா பராமரிப்பில் அதிகாரிகள் 5 கோடி வரை சுருட்டிய கதையை சொல்கிறார் : wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : wiki ,Alwa ,Peter ,Corona ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...