×

ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு!: தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார் பிரதமர் யோஷிஹைட் சுகா..!!

டோக்கியோ: ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்நாட்டு பிரதமர் யோஷிஹைட் சுகா தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார். இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா 2ம் அலை தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்து வருகின்றன. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து தனது இந்திய பயணத்தை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்தார். இந்நிலையில், இம்மாத இறுதியில் இந்தியா வரவிருந்த ஜப்பான் பிரதமரின் வருகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் பிரதமராக யோஷிஹைட் சுகா பதவியேற்ற பின்னர், முதல்முறையாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.

இதற்கிடையில் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அரசு முறை பயணமாக இந்த மாதம் இறுதி நாட்களில் இந்தியா வர திட்டமிட்டிருந்தார். இந்த பயணத்தின் போது அவர், இந்த பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவிருந்தார். மேலும்,  இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதேபோல் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு அவர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் செல்லவிருந்தார். இந்த நிலையில், ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பிரதமர் யோஷிஹைட் சுகா, தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். அதேபோல் பிலிப்பைன்ஸ் பயணத்தையும் அவர் ரத்து செய்துள்ளார்.


Tags : Japan ,Yoshihide Suka ,India , Travel to Japan, Corona, India, Prime Minister Yoshihide Suka
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...