×

உத்தராகண்டில் கேதர்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவில் நடை திறப்பு!: மலர்கள், வண்ண விளக்குகளால் பிரம்மாண்ட அலங்காரம்..!!

டெஹ்ராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில் வழிபாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, அதிகாலை 4:15 மணியளவில் பக்திநாத் கோவில் நடை திறக்கப்பட்டது.  இதையொட்டி மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் பிரம்மாண்டமாக கோவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து பக்திநாத் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள உத்தராகண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத், வழக்கமான வழிபாடுகளை மேற்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 
வழிபாடுகளின் போது தனிமனித இடைவெளி போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே உத்தரகாண்டில் உள்ள யமுனோத்ரி கோவிலை கடந்த 14ம் தேதியும், கங்கோத்ரி கோவிலை 15ம் தேதியும் குருக்கள் திறந்து வழக்கமான பூஜைகளை செய்தனர். ஆனால், கொரோனா சூழ்நிலை காரணமாக, மறுஉத்தரவு வரும் வரை இந்த கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post உத்தராகண்டில் கேதர்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவில் நடை திறப்பு!: மலர்கள், வண்ண விளக்குகளால் பிரம்மாண்ட அலங்காரம்..!! appeared first on Dinakaran.

Tags : Badrinath temple ,Kedarnath ,Uttarakhand ,Dehradun ,Badrinath ,
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்