×

வால்பாறையில் இதமான காலநிலை..! சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக பிற்பகலில் நீடித்து வரும் கோடை மழையால் தேயிலைத் தோட்டங்கள் துளிர்விட துவங்கி உள்ளது. வெப்பம் குறைந்து காணப்படுகிறது.குளுமை  நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்க  துவங்கியுள்ளது. தொடர்ந்து 2 தினங்கள் அரசு விடுமுறை என்பதால் வாலபாறை சுற்றுவட்டாரத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வரத்துவங்கினர்.

இதனால் நகர் பகுதியில் வழக்கத்தை விட மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. வால்பாறை வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் சாலைகளில் குவிந்தனர். நண்பர்களாக, உறவினர்களாக, குடும்பமாக வந்தவர்கள் போட்டோ எடுத்து கொண்டனர். சுற்றுலாப்பயணிகள் வரத்து இருந்தும், வால்பாறையில் தங்குவதற்கு பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் முன்வருவதில்லை. காலையில் வருபவர்கள் மாலைக்குள் மீண்டும் வீடு திரும்பி செல்கின்றனர்.

Tags : Wallbard , Valparai, Climate, Tourists
× RELATED வால்பாறையில் பரபரப்பு: வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்