×

வால்பாறையில் பரபரப்பு: வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்

வால்பாறை: வால்பாறையில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வீட்டை உடைத்து சூறையாடியது. தொழிலாளி குடும்பத்தினர் கூரையில் ஏறி உயிர் தப்பினர். வால்பாறை வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் உணவு தேடி எஸ்டேட், குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வருகிறது. நேற்று அதிகாலை வனத்தை விட்டு வெளியேறிய 6 யானைகள், 2 ஆக பிரிந்து, வால்பாறையை அடுத்த முக்கோட்டு முடி எஸ்டேட்டிற்குள் 3 யானைகள் புகுந்தது. தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானைகள், உணவு தேடி முக்கன் என்பவர் வீட்டை இடிக்க தொடங்கியது. இதைப்பார்த்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் முக்கன் மகள், மருமகன், பேத்தி உள்ளிட்ட 6 பேர் கூரையில் ஏறி உயிர் தப்பினர்.

பின்னர், கூரையின் மீது இருந்தபடியே அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் புகுந்த யானைகளை சத்தம் போட்டும், அண்டா மூடியை கம்பால் அடித்து சத்தம் எழுப்பியும் விரட்ட முயற்சித்தனர். இருப்பினும், யானைகள் தட்டுமுட்டு பொருட்கள், பாத்திரங்கள், மிக்சி உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது.
தொடர்ந்து 2 மணி நேரம் அப்பகுதியில் யானைகள் முகாமிட்டு இருந்ததால் பரபரப்பு நிலவியது. விடிய தொடங்கியதும் யானைகள், அருகில் உள்ள தேயிலை தோட்ட பகுதியை ஒட்டிய வனத்திற்குள் புகுந்தது. மேலும் 3 யானைகள் சங்கிலி ரோடு எஸ்டேட்டிற்குள் புகுந்தது. டிராக்டர் ஓட்டுநர் வீட்டின் முன்பகுதியை உடைத்தது. வீட்டில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.


Tags : Wallbard , Valparai, wild elephants
× RELATED வால்பாறையில் 2ம் சீசன் துவக்கம்: சுற்றுலா பயணிகள் ஆர்வம்