×
Saravana Stores

ஆறுமுகம், அஜித்குமார், தங்கவேலு. அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் விடுமுறை தினமான நேற்று

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகிறது. பவுர்ணமி உள்ளிட்ட விழா நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த நிலை மாறி, அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தொடர் அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறு விடுமுறை தினமான நேற்று அதிகாலையில் இருந்தே தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.  அதேபோல், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட கட்டண தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகரித்திருந்தது. மேலும், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மேலும், தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு காலம் என்பதாலும், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து வருவதாலும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வருகை சற்று குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை உள்ள…

The post ஆறுமுகம், அஜித்குமார், தங்கவேலு. அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் விடுமுறை தினமான நேற்று appeared first on Dinakaran.

Tags : Arumugam ,Ajith Kumar ,Thangavelu ,Annamalaiyar temple ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Thiruvannamalai Annamalaiyar temple ,Swami ,Ajithkumar ,
× RELATED தமிழுக்கு திரும்பினார் பிரியங்கா திரிவேதி