×

விவசாயிகள் பயிர் செய்யும் விளைபொருட்களுக்கு தனி விற்பனையகம்: ரமேஷ்குமார் ஆலோசனை

கோலார்: விவசாயிகள் பயிர் செய்யும் விளைச்சல்களுக்கு தனியாக விற்பனை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று முன்னாள் சபாநாயகரும் சீனிவாசபுரா தொகுதி எம்எல்ஏவுமான கே.ஆர்.ரமேஷ்குமார் ஆலோசனை வழங்கினார். மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி அண்ணிஹள்ளி கிராமத்தில் நடந்தது. விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கி அவர் பேசும்போது, ``விவசாயிகள் சமீப காலமாக இயற்கை சீற்றம் உள்ளிட்ட பல வழிகளில் பாதித்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு ரசாயன உரம், கிருமி நாசனி, விதைகள் மட்டுமில்லாமல் வேளாண் தொழிலுக்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஆனால் விவசாயிகள் பயிர் செய்யும் விளைச்சலுக்கு மட்டும் உரிய விலை நிர்ணயம் செய்யாமல் உள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் பயிர் செய்யும் விளைச்சலுக்கு உரிய விற்பனை வசதியை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும். விவசாயிகள் பயிர் செய்யும் தோட்டக்கலை பயிர்களை நேரடியாக கம்பெனிகள் கொள்முதல் செய்து, அதற்கான விலையை விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் வசதி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு கிரிடிட் கார்டு வசதி செய்து கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே குடையின் கீழ் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு தாராளமாக கடனுதவி வழங்க வேண்டும்’’ என்றார்.


Tags : Rameshkumar Advice , Farmers, products
× RELATED பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம்...