×

சுனில் அரோரா ஓய்வு பெற்றார்: தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்பு

புதுடெல்லி: சுனில் அரோரா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பதவியேற்கிறார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்தது. அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு மூத்த தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவதே வழக்கம் என்பதன் அடிப்படையில், சுஷில் சந்திரா பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் இன்று பதவியேற்கிறார். அவருடைய பதவிக் காலம் 2022ம் ஆண்டு மே 14ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உபி., மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக் காலம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் முடிவடைகின்றன. இதனால், இவரது தலைமையின் கீழ் இம்மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடத்தப்பட உள்ளது. இவர் கடந்த 2019 பிப்ரவரி 14ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் முன்பாக தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பாக, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவராக அவர் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Sunil Arora ,Sushil Chandra ,Chief Election Commissioner , Sunil Arora retires: Sushil Chandra takes over as Chief Election Commissioner today
× RELATED 64 கோடி மக்களை வாக்களிக்க செய்து உலக...