×

இந்திய கொரோனா பாதிப்பில் 3% தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது: முகக்கவசம் அணிவதை தவிர வேறு வழியில்லை...சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி.!!!

சென்னை: தமிழகத்தில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த  விக்டோரியா மாணவர் விடுதி கோவிட் கேர் மையம் மீண்டும் தயாராகி வருகிறது. தயார்படுத்தப்பட்டு வரும் கோவிட் கேர் மையத்தை ஆய்வு செய்தபின் சென்னை திருவல்லிகேணியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சுகாதாரத்துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவிட் கேர் மையங்களை மீண்டும் சுகாதாரத்துறை திறக்கிறது.  

லேசான மற்றும் அறிகுறி இல்லாதவர்களுக்கு விக்டோரியா கோவிட் கேர் மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும். தமிழ்நாட்டில் 11 பேருக்கு பிரிட்டன் கொரோனாவும், ஒருவருக்கு தென்னாப்பிரிக்க கொரோனாவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய பாதிப்பில் 3 சதவிகித கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறினார். கொரோனாவில் இருந்து மீள்வதற்கு முகக்கவசம் அணிவதை தவிர வேறு வழியில்லை.

பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம். நுண்கிருமி எப்படி பரவுகிறது என்பதை அறிந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. தமிழ்நாட்டில் 45 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் எண்ணிக்கை திருப்திகரமாக  இல்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்த ஆர்வம், 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இல்லை. தடுப்பூசி போட்டவர்களில் ஒரு சிலருக்கு தொற்று மீண்டும் வருகிறது. ஆனால், அது தீவிரமாக இருப்பதில்லை.

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை முடிந்து இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளும்போது எதிர்ப்பு சக்தி 70% முதல் 80% அதிகரிக்கும் என்றார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுப குடிநீர் மற்றும் சித்தா கேர் மையத்தை திரும்ப  தொடங்க உள்ளோம் என்றார்.



Tags : Corona ,Tamil Nadu ,Radakrishna ,of , 3% of Indian corona infections occur in Tamil Nadu: There is no other option but to wear a face mask ... Interview with Health Secretary Radhakrishnan. !!!
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...