×

முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு வேலூர் பல்கலைக் கழகம் மற்றும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நிதி

சென்னை: கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கும், இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கும் தமிழ்நாடு அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவை  உள்ளது. எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு உதவிட முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிட வேண்டுமென்று  முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.பொதுமக்கள், சினிமாத்துறையினர், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், கொரோனா நிவாரணப்  பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1.25 கோடி, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் 10 லட்சம் ரூபாயும் வங்கிப் பரிவர்த்தனை  மூலம் வழங்கியுள்ளார்கள்….

The post முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு வேலூர் பல்கலைக் கழகம் மற்றும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நிதி appeared first on Dinakaran.

Tags : University of Vellore ,Chennai ,Government of Tamil Nadu ,Tamil Nadu ,pandemic ,Vellore University ,
× RELATED சென்னை கூவம் ஆற்றின் கழிவு நீர் கலப்பதை தடுக்க நிதி ஒதுக்கீடு