×

காரைக்காலில் மதுவுக்கான கொரோனா வரியை குறைக்க மதுக்கடைகள் மறுப்பு!: 'கலெக்டரிடம் பேசு; கலால்துறையிடம் பேசு'என ஊழியர்கள் ஆணவ பேச்சு..!!

காரைக்கால்: காரைக்காலில் மதுபானங்களுக்கான கொரோனா வரியை குறைக்க முடியாது என கூறும் மதுக்கடை ஊழியர்களின் ஆணவ பேச்சு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2020 மார்ச் முதல் மதுபானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மதுபாட்டில்களுக்கு 25 சதவீதம் முதல் ரகம் வாரியாக 200 சதவீதம் வரை வரி வசூலிக்கப்பட்டது. எனவே 48 ரூபாய்க்கு விற்க வேண்டிய சாதாரண 180 மில்லி மதுபாட்டில் 180 ரூபாய் வரை விற்கப்பட்டது.

சில உயர்ரக மதுபாட்டில்கள் 600 ரூபாயில் இருந்து 1800 ரூபாய் வரையில் விலை உயர்ந்தன. இந்த நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கடந்த ஏப்ரல் 7ம் தேதி மதுபாட்டில்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரியை ரத்து செய்தார். இந்த உத்தரவு நேற்று முதல் புதுச்சேரி மாநிலத்தில் நடைமுறைக்கு வந்த நிலையில் காரைக்கால் மாவட்ட மதுக்கடைகளில் மட்டும் நடைமுறைக்கு வரவில்லை. இதுகுறித்து மதுக்கடையில் விசாரித்த போது அந்த ஊழியர்கள் விலையை குறைக்க முடியாது என ஆணவமாக பேசியுள்ளனர்.

இதனிடையே காரைக்கால் மதுக்கடைகளில் சென்று மதுவிலை குறைக்க கேட்டவர்களிடம் விலையை குறைக்க முடியாது என்றும் வேண்டுமென்றால் கலெக்டரிடம் பேசு...கலால்துறை அதிகாரிகளிடம் பேசு என்று ஊழியர்கள் ஆணவமாக பேசிய வீடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி ஆளுநர் தமிழிசையின் உத்தரவு காற்றில் பறக்கும் வகையில் விலையை குறைக்க முடியாது என ஊழியர்களின் பிடிவாத பேச்சு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Karaikal , Caricature, alcohol, corona tax, staff arrogance
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...