×

முகக்கவசம் போடலனா ரூ.100 அபராதம்,கோயில்கள் இரவு 8 மணி வரை மட்டுமே : துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவிப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் முகக்கவசம் அணியாவிட்டால் நாளை முதல் ரூ. 100 அபராதம் விதிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஹோட்டல் சங்கத்தினருக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, புதுச்சேரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

*100% கொரோனாவை கட்டுப்படுத்த நூறு இடங்களில் பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடப்படவுள்ளது. இப்பணி வரும் 11 முதல் 14 வரை புதுச்சேரியில் நடக்கும்.

*புதுச்சேரியில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 100 அபராதம் நாளை முதல் விதிக்கப்படும்.

*முகக்கவசம் அணியாவிட்டால் கடைகளில், மால்களில் அனுமதிக்கக்கூடாது.

*திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

*அனைத்து நிகழ்வுகளிலும் இருக்கைகளில் 50 சதவீதத்தினரை மட்டும் அனுமதிக்கவேண்டும்.

*திருக்கோயில்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

*இரவு 12 முதல் காலை 5 வரை கொரோனா கட்டுப்பாடுகள் புதுச்சேரியில் அமலில் இருக்கும்.

*பஸ்களில் நின்றபடி பயணிக்க அனுமதி இல்லை. ஆட்டோவில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும்.

*கொரோனா அதிகரிக்கும் சூழலில் பல கட்டுபபாட்டுகளை விதித்து விட்டு மதுவிலையை குறைத்துள்ளீர்களே என்று கேட்டதற்கு, மதுவிலை ஏற்கெனவே இருந்தவிலைதான் நடைமுறைக்கு வந்துள்ளது. புதிதாக மதுவிலையை குறைக்கவில்லை. கொரோனா அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு நிலை இல்லை. கட்டுப்பாட்டுடன் இருந்து கொரோனாவை வெல்வோம் என்று குறிப்பிட்டார்.

Tags : Mask Podalana ,Deputy Governor , துணைநிலை, ஆளுநர் ,தமிழிசை
× RELATED வெயிலில் வேலை பார்க்கும்...