அன்றாட வாழ்வில் தொல்லை கின்னஸ் சாதனைக்கு வளர்த்த நகங்களை வெட்டி வீசிய பெண்: 24 அடி நீளம் கொண்டது

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் அயன்னா வில்லியம்ஸ். இவர் தனது கைகளில்் மிக நீளமான நகங்களை வளர்த்து,  உலகின் மிக நீளமான நகங்களை கொண்ட பெண் என்ற பெயரை பெற்றார். தொடர்ந்து 2017ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றார். 28 ஆண்டுகள் நகத்தை வளர்த்து சாதனை படைத்த அயன்னா, நீண்ட நகங்களை கொண்டுள்ளதால் நாள்தோறும் அன்றாட வாழ்க்கையில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வந்ததால், அவற்றை வெட்டிவிடுவது என முடிவு எடுத்தார்.

நகங்களை வெட்டுவதற்கு முன்பாக கடைசியாக அவற்றை அளவு எடுத்தபோது அவை ஒவ்வொன்றும் 24.07 அடி நீளத்தில் இருந்தன. இது குறித்து அயன்னா கூறுகையில், ‘‘எனது கை நகங்களை வெட்டுவது குறித்து நான் மிகுந்த உற்சாகத்தில் இருந்தேன். ஏனென்றால் நான் புதிய தொடக்கத்துக்காக காத்திருந்தேன்,” என்றார். கின்னஸ் சாதனை நிர்வாகம் கூறுகையில், ‘ கின்னஸ் புத்தகத்தில் நீண்ட நகங்களை வளர்த்ததற்காக இடம் பிடித்த ஒருவர், தனது நகங்களை வெட்டுவது இதுவே முதல் முறை,’ என கூறியுள்ளது.

Related Stories:

>