×

போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : மாநில அரசுக்கு மஜத தலைவர் வலியுறுத்தல்

பெங்களூரு: அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மஜத மாநில தலைவர் எச்.கே.குமாரசாமி தெரிவித்தார்.  பெங்களூருவில் இது தொடர்பாக எச்.கே.குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் அரசு போக்குவரத்து பஸ், மாநகராட்சி போக்குவரத்து பஸ் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.  இதனால் பொதுமக்கள், கூலி தொழிலாளர்கள், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனே பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

 6-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்த கோரி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அரசு தொழிலாளர்களுக்கு 6-வது ஊதிய குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் போது தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டுமா? இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.  அதே போல் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கூட மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசுடன் அனுசரித்து கொண்டு செல்வது நல்லது. அரசு-தொழிலாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல் தினமும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  தொழிலாளர்களுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து பஸ் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கூட மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசுடன் அனுசரித்து கொண்டு செல்வது நல்லது.

Tags : Majatha , Transport Worker, Negotiation, State Government
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...