ஸ்ரீடிவி யூடியூப் சேனலுக்கு தடை : ஆணையத்திடம் ஆர்.எஸ்.பாரதி புகார்

சென்னை: தேர்தல் ஆணையத்திடம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:  அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மீது ஆதாரப்பூர்வமற்ற விமர்சனங்கள் கூடாது. கட்சி மற்றும் வேட்பாளரின் சொந்த வாழ்க்கை குறித்து விமர்சிக்க கூடாது. கட்சி மற்றும் கட்சிக்காக செயல்படுபவர்கள் மீது எந்தவித ஆதாரமுமில்லாமல், விமர்சனங்கள் இருக்க கூடாது, அதனை தவிர்க்க வேண்டும். என்று தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது.

ஆனால்  டிவி யூடியூப் சேனல், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, சித்தரிக்கப்பட்டு எந்த வித ஆதாரமுமில்லாமல், திமுகவிற்கு எதிராக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. எனவே, உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இன்றி, ஆதாரமற்று ஒளிபரப்பபட்ட வீடியோவை உடனடியாக தடை செய்ய வேண்டும். மேலும், தேர்தல் நடத்த விதிகளின் கீழ் குறிப்பிட்ட யூடியூப் சேனல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories:

>