×

நடிகை நமீதா வருகை திடீர் ரத்து: பாஜ, அதிமுக தொண்டர்கள் ஏமாற்றம்

காங்கயம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து பாஜ மாநில நிர்வாக குழு உறுப்பினரும், நடிகையுமான நமீதா காங்கயம் தொகுதிக்கு உள்பட்ட சென்னிமலை, முத்தூர் பகுதியில் நேற்றுமுன்தினம் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காங்கயம் தொகுதிக்கு சினிமா நட்சத்திரங்கள் யாரும் பிரசாரத்துக்கு இதுவரை வரவில்லை.

இதனால் காங்கயம் பகுதியில் உள்ள பாஜ, அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் 20 கி.மீ. தூரத்தில் இருக்கும் சென்னிமலை அல்லது முத்தூருக்குச் சென்று நமீதாவை பார்த்து விடலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால், நமீதா பிரசாரத்துக்கு வரவில்லை என்ற தகவலை அதிமுகவினர் அவர்களது முகநூலில் வருத்தத்துடன் பதிவிட்டிருந்தனர். நமீதா வருகை ரத்தானதால், அதிமுக தொண்டர்கள், பாஜ நிர்வாகிகள் விரக்தியடைந்துள்ளனர்.Tags : Namitha ,BJP ,AIADMK , Visit of actress Namitha Sudden cancellation: BJP, AIADMK volunteers disappointed
× RELATED ஓபிஎஸ் குறித்து அண்ணாமலை பேச்சு...