×

நீட் அனிதா அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் போர்ஜரி வீடியோ: மோசடி புகாரையடுத்து ட்விட்டை நீக்கினார் அமைச்சர் பாண்டியராஜன்!!

சென்னை : நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதா குறித்த சர்ச்சை டீவீட்டை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நீக்கினார்.அரியலூரைச் சேர்ந்த அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கண்டனம் தெரிவித்த நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளார்.அதிமுக அரசு நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியபோது நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தவர் மாஃபா பாண்டியராஜன் ஆவார்.ஆர்.கே.நகரில் ஜெயலலிதா சவப்பெட்டியில் இருப்பது போல் பொம்மை வைத்து பிரச்சாரம் செய்தவர் மாஃபா பாண்டியராஜன்.

இந்த நிலையில், 2017ம் ஆண்டு நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா தற்போது அதிமுகவை ஆதரிப்பது போல் சித்தரித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டார். இதையடுத்து இறந்தவர்களை வைத்து தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் அமைச்சர் பாண்டியராஜனை தகுதி நீக்கம் செய்ய பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.மேலும் அனிதாவை கொச்சைப்படுத்தும் வகையில் வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அனிதாவின் சகோதரர் மணிரத்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தம்முடைய ட்விட்டர் பதிவை நீக்கினார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். 


Tags : BORJARY ,ANITHA ,Minster ,Pandyarajan , அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
× RELATED நாமக்கல்லில் மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு கணவர் தற்கொலை..!!