×

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் 1,633 வாக்குகள் மட்டுமே வாங்கிய எல்.முருகன்

சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜ மாநில தலைவர் எல்.முருகன் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரும் அந்த தொகுதியிலேயே முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். எல்.முருகன் 2012ம் ஆண்டு சங்கரன்கோவில் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜ சார்பில் களம் இறக்கப்பட்டார். அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார். அதாவது அந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்து செல்வி 94,977 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அந்த தேர்தலில் போட்டியிட்ட எல்.முருகன் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அவர் பெற்ற வாக்குகளே வெறும் 1633 தான். அதை தொடர்ந்து அவர் 2016ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டார். இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சரோஜா வெற்றி பெற்று அமைச்சரானார். அங்கு போட்டியிட்ட எல்.முருகன் 1,730 வாக்குகள் தான் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : L. Murugan ,Sankarankoil , By-election in Sankarankoil Only 1,633 votes Purchased by L. Murugan
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...