ஆயிரம்விளக்கு தொகுதி பாஜ வேட்பாளர் நடிகை குஷ்பூ மீது வழக்குபதிவு: போலீசார் நடவடிக்கை

சென்னை: ஆயிரம்விளக்கு தொகுதி பாஜ வேட்பாளர் நடிகை குஷ்பூ மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பூ பாஜ கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இதையடுத்து நடிகை குஷ்பூ தினம் தான் போட்டியிடும் தொகுதிகளில் வீடு வீடாகவும், தெரு, தெருவாகவும் நடந்து சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் அருகில் பிரசாரம் செய்யவும், வாக்குசேகரிக்க வேட்பாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாஜ வேட்பாளர் நடிகை குஷ்பூ தேர்தல் பறக்கும் படையின் அறிவுறுத்தலை மீறி மசூதி அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து தேர்தல் பறக்கும் படையின் அறிவுறுத்தலை மீறி பிரசாரம் செய்ததாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ஆயிரம் விளக்கு தொகுதி பாஜ வேட்பாளர் நடிகை குஷ்பூ மீது போலீசார் தேர்தல் விதிமுறைகளை மீறுதல் உள்ளிட்ட 2 பிரிவின் கீழ்வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Related Stories:

>