×

இயற்கை காடுகளை அழித்து ஆர்எஸ்பதி மரம் வளர்ப்பதை தடுக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை : திருவரங்குளம் பகுதியில் இயற்கை காடுகளை அழித்து, ஆர்.எஸ்பதி மரங்களை வளர்ப்பதை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார பகுதிகளில் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் வனத்துறைக்கு சொந்தமான காடுகள் உள்ளது. இக்காடு களை ஒட்டி தனியாருக்கு சொந்தமான பல நூறு ஏக்கர் காடுகள் உள்ளது. இந்த காடுகளில் பெரும்பாலும் ஆர்எஸ்பதி மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது இதனால் இப்பகுதியில் உள்ள இயற்கை காடுகள் அழிந்து, வறண்ட காடுகளை உருவாக்கக்கூடிய ஆர்எஸ்பதி காடுகள் உள்ளதால் இப்பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு தீவனம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.அரசுக்கு வருமானம் வருகிறது என்பதற்காக மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் அரசு ஆர்.எஸ்பதி காடுகள் மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டு வருகிறது.கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, பள்ளத்தூர், கானாடுகாத்தான், கொத்தமங்கலம், கடியாபட்டி, ராயபுரம், அரிமளம், கீழையூர், வல்லத்ராகோட்டை, திருவரங்குளம், கொத்தகோட்டை, தட்சிணாபுரம், மாம்சன் விடுதி, மழவராயன்பட்டி, காயாம்பட்டி, பொற்பனைக்கோட்டை, இச்சடி, வடவாளம், பெருங்களூர், ஆதனக்கோட்டை, கந்தர்வகோட்டை என தஞ்சாவூர் வரை நீண்ட தொடர் காடுகளில் தற்பொழுது இயற்கைக் காடுகள் அழிக்கப்பட்டு ஆர்எஸ்பதி காடுகளே பரவிக் காணப்படுகிறது.திருவரங்குளம் பகுதியில் வெட்டப்பட்டுள்ள இடத்தில் ஆர்எஸ்பதி காடுகளை மீண்டும் வளர்க்கவிடாமல், இயற்கை காடுகளை வளர்த்து மக்கள் நோய் நொடியின்றி இயற்கை காற்றை சுவாசித்து வாழ தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க, திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வன வளர்ப்பு திட்டத்தை சுட்டிக்காட்டி விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post இயற்கை காடுகளை அழித்து ஆர்எஸ்பதி மரம் வளர்ப்பதை தடுக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvarangulam ,R. ,Dinakaran ,
× RELATED முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்!