×

மாவட்டத்தில் பலாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு-அறுவடை செய்ய முடியாமல் தவிப்பு

தர்மபுரி :  மாரண்டஅள்ளி, வத்தல்மலையில் பலாப்பழம் அறுவடைக்கு தயாராகியுள்ளது. கொரோனா ஊரடங்கினால் அறுவடை பணி தாமதம் ஏற்படுவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தென்னிந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவில் பலா விளைகிறது. கேரளாவில் பாலக்காடு, திருச்சூர், திருவனந்தபுரம், ஆலப்புழை, தமிழகத்தில் பண்ட்ருட்டி, நாகர்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலாமரம் வளர்க்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி, வத்தல்மலையிலும் பலாமரம் வளர்க்கப்படுகிறது. பாக்குமரம், தென்னை மரத்திற்கு ஊடுபயிராக பலாமரம் அதிகம் வளர்க்கப்படுகிறது. பலாப்பழம் விளைச்சல் சீசன் களைக்கட்டியுள்ளது. தற்போது, தர்மபுரி மாவட்ட சந்தைகளில் கேரளா மாநிலம் பாலக்காடு, திருச்சூர் போன்ற பகுதிகளிலிருந்து தருவிக்கப்பட்ட பலாப்பழங்கள் குவித்து வைத்து சந்தைபேட்டையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மாரண்டஅள்ளி, வத்தல்மலையில் உள்ள பலாப்பழம் நல்ல விளைச்சலுக்கு வந்துள்ளது. கொரோனா ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகளால் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டுவர முடியாமல், விவசாயிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பழக்கடைகளில் மாலை வரை விற்பனை செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post மாவட்டத்தில் பலாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு-அறுவடை செய்ய முடியாமல் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Marandaalli, Vathalmalai ,Dinakaran ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு