×

திமுக திட்டங்களை செயல்படுத்துவார்: கே.பி.சங்கரை ஆதரித்து அவரது மனைவி பிரசாரம்

திருவொற்றியூர்:  திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் திருவொற்றியூரில் உள்ள மீனவ கிராமங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள் போன்றவர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதனிடையே கே.பி.சங்கருக்கு ஆதரவாக அவரது மனைவி கஸ்தூரி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், வியாபாரிகள், கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் சிறுபான்மை மக்களை நேரடியாக அவர்களது இல்லங்களுக்கு சென்று சந்தித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் எம்ஜிஆர் நகரில் கஸ்தூரி பிரசாரம் செய்தபோது, ஒரு வீட்டில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று கொண்டிருந்தது. அங்கிருந்த பொதுமக்கள் அவரை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது  மஞ்சள் நீராட்டு விழா காணும் பெண்ணை கஸ்தூரி வாழ்த்தினர். பின்னர் அனைவரிடமும், ‘எனது கணவர் கே.பி.சங்கர் வெற்றி பெற்றால், திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை விரைந்து செயல்படுத்துவார். எனவே, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள், என்றார். அப்போது அங்கிருந்த பெண்கள் எங்களது வாக்கு உதயசூரியனுக்கு தான் என்று உறுதியளித்தனர். இதேபோல், திமுக, காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் போன்ற கூட்டணி கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், மகளிர் அணியினர் வீடு வீடாக சென்று கே.பி.சங்கருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர்.



Tags : Q. ,RB Sangar , Will implement DMK plans: His wife campaigns in support of KP Sankara
× RELATED ரூ.8 லட்சம் மோசடி: பெண் காவலர் மீது வழக்கு