இ.கருணாநிதியை ஆதரித்து டி.ஆர்.பாலு வாக்கு சேகரிப்பு

தாம்பரம்: பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி, தொகுதி முழுவதும் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பல்லாவரம் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற பிரசாரத்தில், திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு எம்பி கலந்துகொண்டு வீதி வீதியாக சென்று இ.கருணாநிதியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘பல்லாவரம் தொகுதியில் இ.கருணாநிதிக்கு வாக்களித்து பொதுமக்கள் அவரை வெற்றிபெற செய்தால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள கொரோனா நிவாரணம் ரூ.4000, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, காஸ் சிலிண்டர் விலை மானியம், கல்விக்கடன் ரத்து, பெட்ரோல் டீசல், விலை மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கிடைக்க செய்வார்.

எனவே பொதுமக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பல்லாவரம் தொகுதியில் இ.கருணாநிதியை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்,’ என்றார்.பிரசாரத்தின்போது, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த முகமது நயினார், மதிமுக நகர செயலாளர் குரோம்பேட்டை நாசர் உட்பட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Stories:

More