×

சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 நாட்களில் நடக்க உள்ள நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை: தலைமை தேர்தல் ஆணையர் அரோரா தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்தது

சென்னை: சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 நாட்களில் நடக்கவுள்ள நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை நடந்தது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 6ம்தேதி நடைபெற உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது. கூட்டத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் கிர்லோஸ்கர், பொதுத்துறை செயலாளர் செந்தில்குமார், சிறப்பு காவல்துறை தலைமை இயக்குனர் கரன்சின்ஹா, அஞ்சனா சின்ஹா, சிறப்பு தேர்தல் பார்வையாளர் அலோக் வர்தன், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி, ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கேட்டறிந்தார். அப்போது சுனில் அரோரா, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்குப்பதிவு செய்யும் வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்குச்சாவடி மையங்களில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும், சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் எனக் கண்டறியப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் துணை ராணுவத்தினருடன் கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும், மண்டல கண்காணிப்பு அலுவலரின் கண்காணிப்பு அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கும் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும், இந்நிலையில், நாளை மாலை 7 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இதை தொடர்ந்து அந்தந்த தொகுதியில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா என்று சோதனை செய்து, அப்படி தங்கியிருந்தால் அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,  தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி எந்த அசம்பாவித சம்பவமும் ஏற்படாத வகையில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Tags : Assembly ,Tamil Nadu ,Chief Election Commissioner ,Arora , With the Assembly elections still 3 days away Law and order protection in Tamil Nadu Consultation on arrangements: Chief Election Commissioner Aurora led the video
× RELATED தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளில்...