×

மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து திண்டுக்கல்லில் நடிகை ரோகிணி பிரசாரம்

திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் பாண்டியை ஆதரித்து நடிகை ரோகிணி வீடு வீடாக நடந்து சென்று தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாண்டி போட்டியிடுகிறார். இவர் திண்டுக்கல் மாநகராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பாண்டிக்கு ஆதரவாக நடிகை ரோகிணி அசோக் நகர், கோவிந்தாபுரம், ஆர்.எம். காலனி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வாக்கு சேகரித்தார்.


வேட்பாளர் பாண்டியை ஆதரித்து சிவப்பு-வெள்ளை கலரில் குடைபிடித்து நேற்று பெண்கள் நூதன பேரணி சென்றனர். கட்சி அலுவலகத்தில் இருந்து கிளம்பிய பேரணி பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகம், மெயின்ரோடு, வழியாக மணிக்கூண்டு சென்றடைந்தது. ஊர்வலத்தில் வேட்பாளர் பாண்டி, நடிகை ரோகிணி, முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உட்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.


Tags : Rokini , Marxist, actress Rohini, propaganda
× RELATED வரலாறு படைத்தது குலசை.. காற்றை...