4 நாட்களில் தேர்தல்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நண்பர் வீட்டில் ஐ.டி.ரெய்டு: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வழக்குப்பதிவு

விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நண்பர் சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாக்காளர் வீட்டிற்கும் சென்று அவர்களது வாக்காளர் அட்டை நகல்களையும், அவர்களின் செல்பேசி எண்களையும் பெற்று வருகிறார்கள் என்று தகவல் வெளியானது.

வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன்பே, பே-டிஎம் ஆன்லைன் மூலமாக பணப்பட்டுவாடா செய்வதற்காக அவர்களது தொலைபேசி எண்களின் விவரங்கள் அதிமுகவினரால் பெறப்பட்டு வருகின்றன. மேலும் தொகுதிக்கு வெளியே வாக்காளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கும் அதிமுக முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நண்பர் சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள சீனிவாசனின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, விழுப்புரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்கு சேகரிப்பின் போது வாக்காளர்களுக்கு தலா ரூ.100 கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் சி.வி.சண்முகம் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related Stories:

>