×

முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்கில் தங்கம் கடத்தி வந்த பயணி கைது

மீனம்பாக்கம்: துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஃபிளை துபாய் சிறப்பு விமானம் இன்று காலை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க துறையினர் சோதனையிட்டனர். அந்த விமானத்தில் வந்த புதுக்கோட்டையை சேர்ந்த முகமது அப்துல்லா (40) என்பவர், ‘என்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை’ என்று கூறி கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார். அவர் மீது சுங்கத்துறையினக்கு சந்தேகம் ஏற்பட்டது. நிறுத்தி சோதனையிட்டனர்.

முகமது அப்துல்லா முகத்தில் அணிந்திருந்த மாஸ்க் சற்று வித்தியாசமாக இருந்தது. உடனே மாஸ்க்கை கழற்றி சோதித்தனர். அதற்குள் 85 கிராம் தங்க பேஸ்ட்டை ஒட்டி வைத்திருந்தது தெரிந்தது. மதிப்பு ரூ.3 லட்சம். அதோடு அவருடைய பையில் ஐபோன்கள், லேப் டாப்களும் இருந்தன. அவைகளின் மதிப்பு ரூ.8.13 லட்சம். இதையடுத்து ரூ.11.13 லட்சம் மதிப்புடைய தங்கம், எலக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து முகமது அப்துல்லாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mask , BJP, AIADMK candidate, Prime Minister Modi, Madurai
× RELATED 51 வயதில் 2வது குழந்தைக்கு தாயான நடிகை