×

பாஜக-வின் மோசமான நோக்கங்களால் ஜனநாயகத்தின் நிலை மோசமாகி இருக்கிறது!: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

டெல்லி: பாஜக-வின் மோசமான நோக்கங்களால் ஜனநாயகத்தின் நிலை மோசமாகி இருக்கிறது என காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அசாமில் பாஜக வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் பிடிபட்டது தொடர்பாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அசாமில் பாஜக வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் பிடிபட்டது தொடர்பாக 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வாக்குப்பெட்டியை கொண்டுசெல்ல லிப்ட் கேட்ட வாகனம் பாஜக வேட்பாளருக்கு சொந்தமானது என தெரியாது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.


Tags : Rahul Gandhi , BJP, Democracy, Rahul Gandhi
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...