×

ஊட்டி – கோத்தகிரி சாலையில் இடிந்து விழுந்த தடுப்புச்சுவர் -அந்தரத்தில் தொங்கும் இரும்பு தடுப்பு

ஊட்டி : ஊட்டி – கோத்தகிரி சாலையில் மைனலை சந்திப்பு அருகே சாலையோர தடுப்புசுவர் இடிந்து இரும்பு தடுப்புகள் அந்தரத்தில் தொங்கிய நிலையில் காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டத்தை மற்ற மாவட்டங்களுடன் இணைக்கும் சாலைகளில் ஒன்றாக ஊட்டி – கோத்தகிரி – மேட்டுபாளையம் சாலை விளங்கி வருகிறது. மழை காலங்கள் மற்றும் கோடை சீசன் சமயங்களில் இச்சாலை மாற்று பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலையில் குறுகலான பல இடங்களில் தடுப்புசுவர்கள் கட்டப்பட்டு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த மாத இறுதியில் பெய்த மழை காரணமாக இச்சாலையில் மைனலை சந்திப்பு அருகே சாலையோர சுமார் 10 அடி உயர தடுப்புசுவர் இடிந்து கீழ்புறமுள்ள தேயிைல தோட்டத்திற்குள் சரிந்துள்ளது. இப்பகுதியில் உள்ள இரும்பு தடுப்பானது அந்தரத்தில் தொங்கிய நிலையில் உள்ளது. இப்பகுதியில் விபத்து ஏற்படாத வகையில் தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள தடுப்பு சுவரும் பலமிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. உடனடியாக சீரமைக்காத பட்சத்தில் சாலை சேதமடைய கூடிய அபாயம் நீடிக்கிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தரமான முறையில் தடுப்புசுவர் கட்ட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்….

The post ஊட்டி – கோத்தகிரி சாலையில் இடிந்து விழுந்த தடுப்புச்சுவர் -அந்தரத்தில் தொங்கும் இரும்பு தடுப்பு appeared first on Dinakaran.

Tags : OOOTI ,Gotagiri Road ,Blocker ,Oodi ,Gothagiri Road ,Minale Junction ,Minale ,Dinakaran ,
× RELATED தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்தும்...