×

துபாயில் இருந்து தங்கம் கடத்திய பெண்

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் தங்கம் கடத்தலை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி சம்பவத்தன்று ரகசிய தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது துபாயில் இருந்து பெங்களூரு வந்த விமான பயணிகளில் பெண் ஒருவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவரை மடக்கிய அதிகாரிகள் உடமைகளை சோதனை செய்தபோது, பிளாஸ்டிக் கவரில் தங்கத்தை பேஸ்டாக மாற்றி வைத்திருந்தார். மேலும் இரண்டு மாத்திரைகளுக்கு தங்கத்தை பவுடராக்கி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரித்ததில், பெண் தமிழக மாநிலம் திருப்பூரை சேர்ந்த பானு(45)என்று தெரியவந்தது. கடந்த மார்ச் 27ம் தேதி சென்னையில் இருந்து விமான மூலம் துபாய் சென்றுள்ளார். அங்கு கடத்தல் கும்பலிடம் இருந்து தங்கம் வாங்கி கொண்டு நேற்று முன்தினம் பெங்களூருவிற்கு விமானத்தில் வந்ததாக தெரியவந்தது.
மேலும் இது தொடர்பாக அவர் கொடுத்த தகவலின் பேரில் ரூ.13.50 லட்சம் மதிப்பிலான 308 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். விசாரணைக்கு பின்னர் பெண் மீது கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் அவரை ஜாமீனில் விடுதலை செய்தனர்.


Tags : Dubai , Woman smuggling gold from Dubai
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...