மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்; சக்கரி, பியான்கா அரையிறுதிக்கு தகுதி

மியாமி: அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடந்த போட்டியில் 2ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா (23) 23ம் நிலை வீராங்கனையான கிரீசின் மரியா சக்கரி (25) உடன் மோதினார். இதில் ஆதிக்கம் செலுத்திய சக்கரி, முதல் செட்டில் ஒருபுள்ளியை கூட ஒசாகாவை எடுக்கவிடாமல் 6-0 என கைப்பற்றினார். 2வது செட்டியிலும் அதிரடிய காட்டிய சக்கரி 6-4 என கைப்பற்றி அரையிறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்ற ஒசாகா அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார்.

இன்று காலை நடந்த மற்றொரு கால் இறுதியில், 8ம் நிலை வீராங்கனையான கனடாவின் பியான்கா ஆண்ட்ரெஸ்கு (20), ஸ்பெயினின் சாரா சோரிப்ஸ் (24) உடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-4 என பியான்காவும், 2வது செட்டை 3-6 என சாராவும் கைப்பற்றினர். 2வது செட்டை 6-2 என கைப்பற்றிய பியான்கா அரையிறுதிக்குள் நுழைந்தார். நாளை காலை 6 மணிக்கு நடக்கும் அரையிறுதியில் பியான்கா-சக்கரி மோதுகின்றனர்.

Related Stories: