கொடுங்கையூர், காமராஜர் நகரில் என்.ஆர்.தனபாலன் வாக்குசேகரிப்பு

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் நேற்று கொடுங்கையூர், காமராஜர் நகர், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “பெரம்பூர் தொகுதியை பொறுத்தவரை முழுவதுமாக நாங்கள் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து விட்டோம். ஒரு சிலர் காலையில் மக்களை சந்தித்துவிட்டு அதோடு மாலை தான் சந்திக்கிறார்கள். ஆனால் நாங்கள் வெயில் என்று பாராமல் நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறோம்.

கொரோனா காலகட்டத்திலும் பெருவெள்ளம் வந்தபோதும் புயல் தாக்கியபோதும் நான் பல்வேறு நல திட்டங்களை செய்துள்ளேன். மேலும் திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாடு பல்வேறு நிதி உதவி செய்து அவர்கள் தொழில் தொடங்க தொடர்ந்து தற்போது வரை உதவி வருகிறேன். பெரம்பூர் பொதுமக்கள் இதையெல்லாம் எண்ணிப் பார்த்து எனக்கு வாக்களிக்க வேண்டும்,” என பேசினார் இந்த வாக்குசேகரிப்பில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Stories:

More
>