×

ஆதார் - பான் கார்டு இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி: ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 207ம் ஆண்டு ஜூலை ம் தேதி அறிவித்தது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, மார்ச் 3ம் தேதிக்குள் ஆதார் - பான் எண் இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதோடு, ரூ1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், வங்கி கணக்குகள் முடங்கி விடும் என எச்சரிக்கப்பட்டது. இதனால், பலரும் ஆதாருடன் பான் எண்ணை இணைத்தனர். கடைசி நாளான நேற்று ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கானோர் முயற்சி செய்ததால், வருமான வரி இணையதளம் முடங்கி யது.

இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, ஆதார்-பான் எண் இணைக்க மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக மத்திய அரசு நேற்று மாலை அறிவித்தது. இதன்படி, வரும் ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார்-பான் எண்ணை இணைக்க வேண்டும்.

Tags : Adar - Extension of opportunity till June 30 to connect the ban card
× RELATED 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க...