×

மஜத எம்எல்ஏவை பாஜவுக்கு இழுக்க முயற்சி எடியூரப்பாவிடம் விசாரணை நடத்த ஐகோர்ட் அனுமதி

பெங்களூரு: மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவை ஆபரேஷன் தாமரை திட்டம் மூலம் பாஜவுக்கு இழுக்க முயற்சித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் எடியூரப்பாவிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம், அனுமதி வழங்கியது. கர்நாடக மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, அக்கூட்டணியை கவிழ்க்க ஆபரஷேன் தாமரை திட்டம் மூலம் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை இழுக்க முதல்வர் எடியூரப்பா முயற்சி செய்தாக அப்போது முதல்வராக இருந்த குமாரசாமி குற்றம்சாட்டினார்.  இந்நிலையில் குருமிட்கல் தொகுதி மஜத எம்எல்ஏவாக இருக்கும் நாகனகவுடா கந்தகூருவை பாஜவுக்கு இழுப்பது தொடர்பாக நாகனகவுடாவின் மகன் சரணகவுடா பாட்டீலிடம் ரெய்ச்சூர் மாவட்டம், தேவதுர்காவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் எடியூரப்பா, பாஜ எம்எல்ஏகள் சிவனகவுடாநாயக், பிரதம் கவுடா ஆகியோர் பேரம் பேசியதாக சிடி வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா, பாஜ எம்எல்ஏகள் சிவனகவுடாநாயக், பிரதம்கவுடா ஆகியோர் மீது சரணகவுடா பாட்டீல், தேவதுர்கா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். தன் மீதான புகாரை ரத்து செய்யக்கோரி முதல்வர் எடியூரப்பா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை விசாரணைக்கு ஏற்றுகொண்ட நீதிமன்றம், எடியூரப்பாவுக்கு எதிரான புகாரை விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் அம்மனு மீதான விசாரணை கடந்த 18ம்தேதி நீதிபதி ஜான்மைக்கல் டிகுன்ஹா அமர்வு முன் நடந்த நிைலயில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார்.

இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதி குன்ஹா நேற்று வழங்கினார். அதில் மனுதாரர் மீதான குற்றத்தில் ஆடியோ ஆதாரங்கள் தெளிவாக இருப்பதால், அவரிடம் விசாரணை நடத்துவது அவசியமாகவுள்ளதால், வழக்கை ரத்து செய்யகோரி மனுதாரர்  தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதுடன் முறைப்படி அவரிடம் போலீசார் விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.



Tags : ICC ,Eduyurappa ,Majatha MLA ,BJP , ICC allows probe into Eduyurappa's attempt to lure Majatha MLA to BJP
× RELATED ஐசிசி நடவடிக்கை; பாகிஸ்தான் அணிக்கு...