×

அலிப்பூரில் மனைவியை கொன்று கணவன் தற்கொலை

புதுடெல்லி; டெல்லி அலிப்பூரில் மனைவியை கொன்று கணவன் தற்கொலை செய்து கொண்டார். பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மிதிலேஷ்(25). இவரது மனைவி மோனிகா(22). வடக்கு டெல்லி அலிப்பூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் மதிலேஷிற்கு பாதுகாவலர் பணி கிடைத்தது. எனவே கணவன், மனைவி இருவரும் டெல்லி வந்து அடுக்குமாடி குடியிருப்பில் தங்கினர். மனைவி நடத்தையில் மிதிலேஷிற்கு சந்தேகம் ஏற்பட்டது. ஹோலி பண்டிகை முடிந்ததும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உறவினர்கள் வந்து தடுத்தனர். அவர்களிடம் சண்டை போடவில்லை.

நான் மது அருந்தியதால் பிரச்னை வந்தது என்று கூறி அவர்களை மிதிலேஷ் அனுப்பி வைத்து விட்டார். அதன்பின் மனைவியை லத்தியால் சரமாரியாக அடித்துக்கொன்றார். பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Alipore , Husband commits suicide by killing wife in Alipore
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து