×

தேர்தல் ஆணைய அனுமதியின்றி வாக்காளர்களுக்கு 'பல்க் எஸ்.எம்.எஸ்.'அனுப்பியது ஏன்?: புதுச்சேரி மாநில பாஜகவுக்கு ஐகோர்ட் கேள்வி..!!

சென்னை: தேர்தல் ஆணைய அனுமதியின்றி வாக்காளர்களுக்கு பல்க் எஸ்.எம்.எஸ். அனுப்பியது ஏன் என புதுச்சேரி மாநில பாஜகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. புதுச்சேரி பா.ஜ.க. தொகுதி வாரியாக வாட்ஸ் அப் குரூப்ஸ் தொடங்கி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். வாக்காளர்களின் அனுமதி இல்லாமல் பல்க் எஸ்.எம்.எஸ். முறையை பாரதிய ஜனதா கட்சியானது அனுப்பி வருவதாக புதுச்சேரி பாஜகவுக்கு எதிராக ஆனந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் பா.ஜ.க.வுக்கு எதிரான அனுமதி பெறாமல் பல்க் எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக கூறப்படும் புகார் மீதான விசாரணை முடியும் வரை அங்கு தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, பல்க் எஸ்எம்எஸ் விவகாரத்தில் விசாரணை நடைபெறும் நிலையில், தேர்தலை தள்ளி வைக்கும் பேச்சு தேவையற்றது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஆதார் ஆணையம் தரப்பில் இருந்து ஆதார் தகவல்கள் எதுவும் கசியவில்லை என்றும் ஆதார் தகவல்கள் திருடப்படவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் புதுச்சேரி பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உறுப்பினர்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தான் எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்பட்டதாகவும், ஆதார் ஆணையத்தில் இருந்து எந்த தகவலும் பெறவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்ட போது பல்க் எஸ்எம்எஸ் குறித்து சைபர் கிரைம் விசாரித்து வருகிறார்கள்.

இதுவரை அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு அறிக்கை அனுப்பியிருக்கிறோம். அந்த அறிக்கையை பொறுத்து இன்று அல்லது நாளை சின்னங்கள் சட்டத்தின் படி பாஜக மீது தலைமை தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்த நீதிபதிகள் புதுச்சேரி பாஜக மீதான நடவடிக்கையை தொடரலாம் என உத்தரவிட்டிருக்கிறார். அதேசமயம் நமது நாட்டில் வாக்குரிமை மிகவும் முக்கியமானது. அதன் நம்பகத்தன்மையை மற்ற நாடுகளுக்கு பறைசாற்றும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Election Commission ,ICC ,Puducherry ,BJP , Election, 'Bulk SMS', Pondicherry State BJP, iCourt
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...