×

காரிமங்கலம் வாரச்சந்தையில் தேங்காய் விற்பனை மந்தம்-விவசாயிகள் வேதனை

காரிமங்கலம் :  தேர்தல் நடத்தை விதிமுறையால் காரிமங்கலம் வாரச்சந்தையில் தேங்காய் விற்பனை மந்தமானதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.காரிமங்கலம வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக திங்கட்கிழமை மதியம் முதல் தேங்காய் சந்தை நடப்பது வழக்கம். கடந்த பல வாரங்களாக தேங்காய் வரத்து குறிப்பிட்ட அளவு இருந்தும், வியாபாரிகள் இல்லாததால் விற்பனை மந்தம் அடைந்தது.

நேற்று நடந்த சந்தையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, பாரூர், அரசம்பட்டி, புலியூர் மற்றும் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேங்காய் விற்பனை கொண்டு வரப்பட்டது. அளவை பொருத்து ₹7 முதல் ₹16வரை தேங்காய் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தேங்காய் வியாபாரிகள் அதிகம் வராததால், தேங்காய் விற்பனையாகாமல் தேங்கியது. தேர்தல் விதிமுறை மற்றும் சோதனை காரணமாக, வெளி மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் வராததால் வெறிச்சோ காணப்பட்டது. இதனால் தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் கவலையடைந்தனர்.

Tags : Karimangalam , Karimangalam: Farmers suffer due to sluggish sale of coconuts at Karimangalam weekly market due to election code of conduct.
× RELATED திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்